tamilnadu

img

குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூன் 10-  குடிநீரை சட்ட விரோதமாக விவசாய பாச னத்திற்கு திருப்பி விடுவதால், ஆரணி பேரூ ராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூ ராட்சியில் 15 வார்டுகளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தெரு  குழாய்கள், வீடுகளில் உள்ள இணைப்பு களுக்கும் தண்ணீர் வருவது குறைந்துள் ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு குடும்பத்திற்கு 10 குடங்களுக்கு குடிநீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இத னால் குளிக்க, துணி துவைக்க கூட முடியா மல் மக்கள் அவதிப்படுகின்றனர். வசதிபடைத்தவர்கள் சிலர் சட்டவிரோத மாக மின்மோட்டாரை பொருத்தி, பாதாள தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி களில் தண்ணீரை அதிகளவு சேமித்து வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. இதுஒருபுறமிருக்க, குடிநீரை, சட்ட விரோ தமாக விவசாய பாசனத்திற்கு திருப்பி விடுவ தாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆரணி பேரூராட்சி செயல் அலுவலரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் நாகலட்சுமி, கிளை  நிர்வாகி முனியம்மாள் உட்பட அப்பகுதி மக்கள்  மனு அளித்தனர்.

;