tamilnadu

img

குடியிருப்பு பகுதியில் செல்போன் உயர் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

கடலூர், ஆக 2- குடியிருப்பு பகுதியில் அரசின் அனுமதி இல்லாமல் தொலைதொடர்பு உயர் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து கடலூர்  அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பி. வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லா மல் குடியிருப்பு பகுதிகளில் தொலை தொடர்பு உயர் கோபுரங்கள் அமைக்கக் கூடாது. ஆனால் கடலூர் பாதிரிக்குப்பம் கூட்டு றவு நகரிலும், கோண்டூர்,  வெளிச்செம் மண்டலம் குறிஞ்சி நகரிலும் தொலை தொடர்பு உயர் கோபுரங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. புற்றுநோயை உருவாக்கும், குழந்தை களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் தொலைதொடர்பு உயர் கோபுரங்கள் குடி யிருப்புப் பகுதியிலும், இயற்கை பேரிடர் நகரமான கடலூர் ஊராட்சி, நகராட்சி பகுதி களிலும் தொலைதொடர்பு உயர் கோபுரங்  கள் அமைக்கக் கூடாது. பசுமை தீர்ப்பா யத்தின் மூலம் ஆபத்தில்லாத, மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையோடு தொலைதொடர்பு உயர் கோபுரங்கள் அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பொதுச்செயலாளர் எம்.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பாதிரிக்குப்பம் கூட்டுறவு நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் அப்பாதுரை, செயலாளர் தேவநேசன், குறிஞ்சி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்  தலைவர் கண்ணன், செயலாளர் ராஜ சேகர், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் காசி நாதன், காத்தவராயன், ரமணி, கல்யாண குமார், ராதாகிருஷ்ணன், சரவணன், செல்வ கணபதி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கே.பி.சுகுமாரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கோரிக்கைகள் குறித்த மனு அனுப்பி வைக்கப்பட்டது.