கடலூர், ஜூலை 27- நான்கு வழிச்சாலை ப்பணிக்காக விவசாய நிலம் , வீடுகள் கையகப் படுத்து வதை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை-கன்னியா குமரி தொழில்நுட்ப சாலைத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதல் பண்ருட்டி வழியாக மடப்பட்டு வரை யில் உள்ள இருவழிச் சாலையை 4 வழிச் சாலை யாக மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக உலக வங்கி ரூ.600 கோடி அளவிற்கு கடன் வழங்க உள்ளது. இதற்காக குமராபுறம், மருதாடு, நெல்லிக்குப்பம் நகரம், வரக்கால் பட்டு, வெள்ளப்பாக்கம், செஞ்சிகுமாரபுரம், கீழ்க வரப்பட்டு கிராமங்களில் புறவழிச்சாலை அமைக்க விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூரில் இருந்து மடப்பட்டு மார்க்கமாக செல்ல (கடலூர்-பாலூர்-பண்ருட்டி சாலை), (கடலூர்-நெல்லிக்குப்பம்- பண்ருட்டி சாலை) (தென்பெண்ணையாற்றில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாலை) ஆகிய மூன்று சாலைகள் உள்ள நிலையில் விவசாய நிலங்களை அழித்து நான்காவதாக புதிய சாலை தேவையில்லை என வலியுறுத்தி வருகின்றனர். சுங்கச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தலாம். விவசாயி கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்தால் விவசாய குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும். எனவே, இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் மருதாடு கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் இஐடி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நெல்லிக்குப்பம் பகுதி தலைவர் சம்பத், செயலாளர் ராமானுஜம், நிர்வாகிகள் சுரேஷ், சக்திவேல், சரவன பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மரு தாடு பகுதியில் இத்திட்ட த்திற்கு எதிற்ப்பு தெரிவித்து வீடுகள், கடைகள் தோரும் கருப்பு கொடி ஏற்றி உள்ள னர்.