tamilnadu

பாகுபாடு இன்றி அனைவருக்கும் நிவாரணம்... தமிழக அரசுக்கு டியூஜே கோரிக்கை....

சென்னை:
கொரோனாவில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டி.யூ.ஜே நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டியூஜே மாநில தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிர்க்கொல்லி நோயான கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் குறித்தும், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் உயிரை துச்சமென நினைத்து களத்தில் நின்று செய்தி சேகரித்து பத்திரிகைகள் மற்றும்  ஊடகங்களில் வெளியிடும் பணியில் தங்கள் இன்னுயிரை கொடுத்த முன்கள பணியாளர்களான பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக் கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக அதற்குரிய அரசு ஆணையையும் வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிவாரண நிதியை பெறுவதற்கு மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர் கள், அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் கள் அட்டை, மாவட்ட ஆட்சியரால் வழங்கப் பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.கொரோனா பெரும் தோற்றால் பாதிக் கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் நிர்கதியாய், அனாதையாய் அரவணைக்க யாருமின்றி பெரும் சோகத்தில் வாழ்ந்து வருகின்றது.இந்த நிலையில் அந்தக் குடும்பங்களை அரவணைத்து பல்வேறு உதவிகளை செய்ய வேண்டிய மாநில அரசே மாவட்டம், தாலுகா என்று வேறுபடுத்தி  உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.

எனவே, தற்போது வெளியிட்டுள்ள அரசு ஆணையை மீண்டும் பரிசீலனை செய்து முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று, நிபந்தனைகளை தளர்த்தி தாலுகா அளவிலும், ஒன்றிய அளவிலும் பணிபுரிந்து உயிரிழந்த அத்தனை பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் பாரபட்சமில்லாமல் நிதி உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகை யாளர் குடும்பத்துக்கு மத்திய அரசால் வழங்கப் படும் ரூ.5 லட்சம் நிதி பிஐபி மூலமும், தமிழக அரசின் செய்தி துறையின் மூலமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி அந்த நிதியை பெற்று ரூ.15 லட்சமாக உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்துக்கு வழங்க தமிழக அரசை டி.யூ.ஜே  கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

;