tamilnadu

img

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி நூறு நாள் வேலையை மறுப்பதா? அறிவிக்கையை திரும்பப் பெற விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 55 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கிட முடியாது என்ற ஊரக வளர்ச்சித் துறையின் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்என விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மிகக்கடுமையாக சிதைக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு மாறாக ஒப்பந்தகாரர்களை பயன் படுத்தியும் இயந்திரங்களை பயன்படுத்தியும் வந்ததால் திட்டத்தின் பயனாளிகளுக்கு அற்ப சொற்ப நாட் களே வேலை வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வேலை நிறுத்தப் பட்டது. தற்போது வேலை அளிக்கும் ஊராட்சிகளில் 55 வயதிற்கும் மேற் பட்டவர்களுக்கு கொரோனா கால விதிகளை காரணம் காட்டி வேலை மறுக்கப்படுகிறது. இதனால் அவர் களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஊரக வளர்ச்சித் துறை அவர்களுக்கு தனிமனித இடைவெளியை பின்பற்றி வேலை வழங்குவதையும் அல்லது அவர்கள் உயிர் வாழ உரிய நிவாரணம் வழங்குவதையும் உத்தரவாதப் படுத்த வேண்டும். அதேபோல் நிறுத்தப்பட்டுள்ள வேலைகளை முழுவீச்சில் தமிழ்நாடு முழுவதும் துவங்கிட வேண்டும்.  உயர்த்தி அறிவிக்கப் பட்டுள்ள தினக்கூலி ரூபாய் 273ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். கொரோனா காலமென்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர்களுக்கு திரும்பியுள்ள நிலையில், வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாய் ஆகவும்  உயர்த்தி வழங்கிட வேண்டும்.

ஏப்ரல் 6 தேர்தல் நாளன்று திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கிட அறிவிக்கப்பட்டுள்ள விடுப்புடன் கூடியஊதியம் ரூபாய் 273ஐ வேலை அட்டைபெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உடன் வரவுவைக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு தற்போதைய நெருக்கடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதே ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் செயலாகும். வேலையும் இல்லை; கூலியும்இல்லை என்று அரசு அறிவிப்பில்கூறியுள்ளது. இது கொரோனா மரணத்தைவிட மிகக் கொடுமையானது ஆகும். எனவே, அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;