tamilnadu

img

நீலகிரிக்கு ரெட்அலர்ட் தொடரும்... வானிலை ஆய்வு மையம்

சென்னை:
அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட் டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் உள் கர்நாடகா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதிலும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 58 செ.மீ. மழை கொட்டியது.அதன் தொடர்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மற்றும்கூடலூரில் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது.

இந்தநிலையில், ஞாயிற்றுக் கிழமையும்பலத்த  மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத் துக்கு ரெட் அலர்ட் தொடருகிறது. கோவை, தேனி மாவட் டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;