tamilnadu

img

ரேசன் கடைகள் விடுமுறையில் மாற்றம்

சென்னை:
இந்த மாதம் முதல் நவம்பர் வரை நியாய விலை கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாயவிலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.நியாய விலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர்.எனவே விடுமுறை நாளிலும் நியாய விலை கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக இந்த மாதம் 19 ஆம் தேதி, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, நவம்பர் 21ஆம் தேதி ஆகிய நாட்கள் (மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை) நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;