tamilnadu

img

தேர்தல் ஆணையம் இருக்கிறதா?

“உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவின் போது, ராமர் பிரானின் ஆளுயர கட்டவுட் வாக்காளர்களை வரவேற்கிறது. இது உண்மையா? உண்மையாக இருந்தால் இல்லங்களின் பூஜை அறைகளிலும், ஆலயங்களின் மூலஸ்தானங்களிலும் நடுநாயகமாக அமர்ந்து அருள்பாலிக்கவேண்டிய ஸ்ரீராமரின் திரு உருவத்தை தெருவில் நிறுத்தலாமா? தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறதா?” என்று சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.