tamilnadu

img

விழுப்புரத்தில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு கூட்டம்

விழுப்புரம், ஜூன் 29- மழை நீர் சேகரிப்பு (ஜல் சக்தி அபியான்) திட்டத்தை மாவட்ட அளவில்  நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களு டன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்  இல.சுப்பிரமணியன்   பேசுகையில்,  மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஜூலை  1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள்,கிராம ஊராட்சி களில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் தனியாருக்கு சொந்தமான  கட்டிடங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த  வேண்டும். ஏற்கனவே பழுதடைந்த நிலையிலுள்ள கட்டமைப்புகளை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும்  அவர் கூறினார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, பேரூராட்சித்துறை மற்றும் பொதுப்  பணித் துறைக்கு சொந்தமான நீர் நிலைகள்,  நீர்வரத்து வாய்க்கால்  களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு, தனியாருக்கு  சொந்தமான இடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,  பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறு களை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற வேண்டும். நீர்வள  ஆதார அமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் அதிகமான மழையை பெற முடியும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

;