tamilnadu

img

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்குவாய்ப்புள்ளதாகவும், ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;