tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....

சென்னை
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கனமழை பெய்வதற்கான சூழல் அடிக்கடி உருவாகிறது. மழையும் பொழிந்து வருகிறது. 

இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மதுரையைச் சுற்றியுள்ள லேசான அளவில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;