tamilnadu

img

லலிதா ஜூவல்லரியில் ரெய்டு வரி ஏய்ப்பு-முறைகேடு கண்டுபிடிப்பு....

சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித் துறை லலிதா ஜூவல்லரி, சிவ் சஹாய் அண்ட் சன்ஸ் நிறுவனங்களில் சோதனை நடத்தி வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளதைஉறுதி செய்துள்து.

மார்ச் 3- ஆம் தேதி சென்னையை தலைமையிடமாகக் கொண்ட அந்த இரண்டு  நிறுவனங்களில் வருமானவரித்துறைசோதனை நடத்தியது. ஒரு நிறுவனம் தங்கத்தை கட்டிகளாகவிற்பவருக்குச் சொந்தமானது. மற்றொன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய சில்லரை தங்க விற்பனையாளர்ஒருவருக்குச் சொந்தமானது.

இந்தச் சோதனையில் கணக்கில் காட்டாமல் மறைக்கப் பட்ட ரூ.1000 கோடி-க்கும் அதிகமான தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கணக்கில் வராத  ரொக்கம் ரூ.1.2 கோடிகைப்பற்றப்பட்டுள்ளது.லலிதா ஜூவல்லரி,  சிவ் சஹாய் அண்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான  சென்னை, மும்பை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர். உள்ளிட்ட 28 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தங்கக் கட்டி விற்பனையாளரின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டாமல் விற்பனை நடைபெற்றிருப்பது  தெரியவந்துள்ளது; அதன் கிளைகளிலிருந்து போலியான பண வரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சில்லரை நகை விற்பனையாளரின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உள்ளூர் நிதியாளர்களிடமிருந்து பணத்தை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தியது, கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளது, தவறான வழியில் கடன் பெற்றது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது.இந்த நிறுவனங்கள் பண மதிப்பிழப்பு காலத்தில் இந்தஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது

வருமானவரித்துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை மார்ச் 3, மார்ச் 4-ஆகிய தேதிகளில் இந்தச் சோதனையை நடத்தியுள்ளது. ஆனால் சோதனையின் முடிவு தாமதமாக மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தவர்கள் லலிதா ஜூவல்லரி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.
 

;