மழை நீர் வழிந்தோட கால்வாய் அமைக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
ராணிப்பேட்டை, அக்.27 - நெமிலி பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு முன்பு மழை நீர் வழிந்தோட கால்வாய் அமைக்க கோரி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அரக்கோணம் நெமிலி தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார். நெமிலி பேரூராட்சி 14வது வார்டு சந்தை மேட்டு தெரு, சந்தை மேட்டு தெரு குறுக்கு தெரு பகுதியில் மழை நீர் வழிந்தோட கால்வாய் கட்ட வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் கால்வாய் கட்ட போதிய நிதி இல்லை என காரணம் காட்டி பணிகள் நடைபெறாமல் உள்ளது. தற்போது அப்பகுதியில் சாலை அமைக்க சீர் செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலை யில் சிபிஎம் அரக்கோணம் நெமிலி தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன் தலை மையில் அப்பகுதி மக்களை திரட்டி சாலை அமைக்கும் பணிகளுக்கு முன்பு முத லில் மழை நீர் வழிந்தோட கால்வாய் கட்ட வேண்டும் என நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் எழிலரசி யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுமதி, எலக்ட்ரீசி யன் நந்தகுமார், சங்கர், ஆறுமுகம், மணி, இன்ப நாதன், நாகராஜ், நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
                                    