tamilnadu

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020 சிறந்த நூல்களுக்கான விருதுகள், கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜன. 17- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வையொட்டி சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்படுவதோடு, கவிதை, சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4-ஆவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழர் பிப்ரவரி 14 முதல் பிப்ர வரி 23 வரை நடைபெறவுள்ளது. இதனை யொட்டி சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை சிறுகதை  போட்டிகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப் படுகின்றன.

சிறந்த நூல்களுக்கான விருதுகள்:

2019 ஆம் ஆண்டில்; தமிழில் வெளி யான கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய  நூல்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று  விருதுகளும்,  கட்டுரைப் பிரிவில் கலை,  இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய பொருளில் ஒன்றினைக்கொண்ட கட்டுரை நூலுக்கு ஒரு விருதும், அரசி யல், சமூகம், வரலாறு ஆகிய பொருளில்  ஒன்றினைக்கொண்ட கட்டுரை நூலுக்கு  ஒரு விருதும் என மொத்தம் ஐந்து சிறந்த  நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட வுள்ளன. ஒவ்வொரு விருதும் சான்றிதழ் மற்றும் விருதுப்பட்டயத்துடன் ரூ.5000 (ஐந்தாயிரம்) பரிசுத்தொகை கொண்ட தாக அமையும். விருதுகளுக்கான பரி சீலனைக்கு பதிப்பகத்தார், படைப்பாளி கள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்  களையும் தாங்கள் பரிந்துரைக்கும் நூல்  களையும் அனுப்பிவைக்கலாம். ஒவ் வொரு நூலுக்கும் மூன்று பிரதிகளை அனுப்பவேண்டும். (வாசகர்கள் தாங்  கள் பரிந்துரைக்க விரும்பும் நூல்களின்  பெயர்களையும் அஞ்சல் மூலம் அனுப்பலாம்)

கவிதை, சிறுகதைப் போட்டிகள்:

கவிதை மற்றும் சிறுகதைப் போட்டி களுக்கு எந்தப் பொருளினைக் கொண்ட  படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. அவை, படைப்பாளரின் சொந்த படைப்  பாகவும் இப்போட்டிக்கென எழுதப் பட்டவையாகவும் வேறு எதிலும் வெளி வராததாகவும் இருக்க வேண்டும். மேலும், போட்டி முடிவுகள் வெளியாகும்  வரை வேறு பிரசுரத்திற்கோ, போட்டி களுக்கோ படைப்புகளை அனுப்பக் கூடாது. எவ்வித சமூக ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது. கவிதைகள் அதிக பட்சமாக 40 வரிகளுக்கு மிகாமல் அமைதல் வேண்டும். சிறுகதைகள் ஏ-4  தாளில் 10 பக்க அளவில் அமையலாம். தேர்வுபெறும் கவிதைகளுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000, என்ற அளவிலும், சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும். புடைப்புகளை : ராசி.பன்னீர்செல் வன், தலைவர், தேர்வுக்குழு, (செல்: 9486752525), புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருதுகள்-2020, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவல கம், புதிய பேருந்து நிலைய பின்புறம்,  புதுக்கோட்டை – 622001 என்ற முகவரிக்கு  அனுப்ப வேண்டும். rasipanbeersel vangmail.com  –என்ற மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம். நூல்கள் மற்றும் படைப்புகள் வந்து சேர கடைசி  நாள்: 05.02.2020. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;