tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுச்சேரியை பாஜகவுக்கு தாரைவார்த்த ரங்கசாமி 
புதுச்சேரி, மார்ச் 3- புதுச்சேரி தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப் பட்டுள்ளதாக முத லமைச்சர் ரங்க சாமி அறிவித்துள் ளார். 

பாஜகவின் சொல்படி ஆட்சி நடத்தி  வரும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்க சாமி, நாடாளுமன்றத் தேர்தலில் புதுச் சேரியை தொகுதி பாஜகவுக்கு கொடுத்துள்ளார்.

 புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முத லமைச்சருமான ரங்கசாமி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். 

எய்ம்ஸ் குறித்து குழந்தைத்தனமாக
பேசும் ஒன்றிய அரசு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்

சென்னை,  மார்ச் 3- தமிழ்நாடு  முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மார்ச் 3 ஞாயிறன்று சென்னை சைதாப்பேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், “ இந்த சொட்டு  மருந்து முகாமில் 2 லட்சம் பணியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டி னத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய  அரசு குழந்தைத்தனமாக காரணங்களை  கூறுகிறது. எடப்பாடி பழனிசாமி முத லமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில்  எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல்  நாட்டினார்? மரங்கள் முழுமையாக அகற்  றப்படாததால், எய்ம்ஸ் பணிகள் கால தாமதம் ஆனது என்று கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று தெரி வித்தார்.