tamilnadu

img

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்

சென்னை, ஜன. 5-  இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவ.9 ஆம் தேதி தொடங்கி டிச.8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (ஜன.05) சென்னை தலைமை செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் 3,15,43,286 பெண் வாக்காளர்கள், 3,04,89,866 ஆண் வாக்காளர்கள், 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 6,20,41,179 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் 1,70,125 வாக்காளர்கள் உள்ளனர்.

வெளிநாட்டில் 3,310 வாக்காளர்கள் உள்ளனர். 4,48,138 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 18-19 வயதில் 4,66,374 வாக்காளர்களும் உள்ளனர்.