tamilnadu

img

காவல்துறையினர் மக்களை வதைக்கும் மைக்ரோ பைனான்ஸ் தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் எதிர்ப்பு இயக்கங்கள்

சென்னை, ஜூன் 27- நுண் நிதி நிறுவனங்களின் அடா வடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி யுள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்க ணக்கான நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் கொடுத்து வட்டியுடன் வசூ லித்து வருகின்றன. குடும்பச் செலவு களுக்காக, கல்வி, விவசாயம், மருத் துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக கடனை பெறக் கூடிய பெண்கள் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தி வருகின்ற னர்.  இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுவேலை, முறை சாரா, கட்டுமானம், விவசாயம், ஜவுளி, பட்டாசு, பீடி, தோல், பனியன் போன்ற அனைத்து சிறு, குறு தொழில்களும் முடங்கி, வேலை இழந்து, வருமா னம் இல்லாமல் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நுண் நிதி நிறு வனங்கள் கடன் தொகையை வசூ லிப்பதற்கு கடுமையான நடவ டிக்கைகளை எடுத்து வருகின்றன. குழு தலைவர்களையும் சில இடங்களில் அடியாட்களையும் பயன் படுத்தி கடன் வசூல் நடத்துவதுடன் வட்டியையும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

 இப்படிப்பட்ட செயலை கண் டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாநில அர சுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் மனு கொடுத் துள்ளது.  இதுபற்றிய விபரங்களை, சங்கத் தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள னர். அதன் முக்கிய அம்சங்கள் வரு மாறு: சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது, ஆகஸ்ட் 31 வரை கடனையும் வட்டி யையும் வசூல் செய்யக்கூடாது என்று அறிவிப்பு விடுத்துள்ளது. பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ரிசர்வ் வங்கி கூறியுள்ள விதிமுறை களை பின்பற்ற வேண்டும் எனவும் மீறும் நிதி நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்ச ரித்திருக்கிறார்கள். இத்தகைய அறி விப்பை ஜனநாயக மாதர் சங்கம் வர வேற்கிறது.  ஆனால் பல இடங்களில் இரவு 11 மணி வரை வீடுகளில் உட்கார்ந்து, பணத்தை கட்ட வேண்டுமென பெண் களை நிர்ப்பந்தித்து வருகின்றன நுண்நிதிநிறுவனங்கள். அடியாட் களை பயன்படுத்தி மிரட்டுவதும்,  கடன் அட்டையில் ரெட், பிளாக் மார்க் செய்வதும், இதன்மூலம் வேறு எந்த வங்கிகளிலும் கடன் பெற முடியாது என மிரட்டுவதும் போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடியில் அராஜகம்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நுண் நிதி நிறு வனங்கள் கடன் வசூல் செய்ய ககூடாது என்று அறிக்கை விடுத்துள் ளார். அங்கு அவரது அறிவிப்பை மீறி, மகா சேமம், கிராம விடியல், சூரிய உதயம், கிராமியம், ஆசீர்வா தம், கிராம உதயம், ஹெச்டிஎஃப்சி, ஐடிஎப்சி, ஐஎஃப்எஸ்சி, ஆக்சிஸ் வங்கி போன்ற பல்வேறு நிறுவ னங்கள் கடனை கட்ட வேண்டு மென்று பெண்கள் மற்றும் மீனவப் பகுதி மக்கள் மத்தியில் நெருக்கடி யை கொடுத்து வருகின்றன. இது குறித்து மாதர் சங்கத்தின் தூத்துக் குடி மாவட்டச் செயலாளர் பி. பூமயில், மாவட்டக் குழு உறுப்பினர் கள் சரஸ்வதி, ஜெயலட்சுமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் மனு கொடுக்க சென்றபோது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவி யாளர் மனுவை வீசி எறிந்து உள்ளார். அதோடு அவர்களை அவமானப் படுத்தி தாக்கியுள்ளார். அங்கிருந்த காவல் துறையைச் சேர்ந்தவர்களும் மாதர் சங்க தலைவர்களைத் தாக்கி யுள்ளனர்.

கடலூரில் போலீஸ் அடாவடி
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே நுண் நிதி நிறுவனங்களின் கெடுபிடியான வசூல் மற்றும் மிக இழிவாக வசைபாடுவது குறித்து கடலூர் மாவட்ட மாதர் சங்கத்தலை வர்கள் வடக்குத்து காவல்நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளனர். சிஎஸ்ஆர் வாங்க வரவேண்டுமென காவல்நிலையத்தில் தகவல் கொடுத்த அடிப்படையில் மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டக்குழு உறுப்பினர் மாதவி, மாநில குழு உறுப்பினர் மேரி, மாவட்ட குழு உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் சென்றுள்ளனர். அதுசமயம் காவல் நிலைய ஆய்வாளர், மாதர் சங்கத் தலைவர்களைப் பார்த்து படம் காட்டியவர்கள் நீங்கள் தானோ என்று மாதர் சங்கம் நடத்திய போரா ட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி யுள்ளார். உங்களுக்கு வேறு ஏதும் வேலை இல்லையா என்றும் கேட் டுள்ளார். இப்படி சில மாவட்டங்களில் காவல் துறையும் அரசு அதிகாரி களும் நடந்து கொள்வதை மாதர் சங்க மாநிலக்குழு சார்பாக வன்மை யாக கண்டிக்கிறோம்.  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கடனையும் வட்டியையும் கெடுபிடி யாக வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கைகள் வெளியிட்டு இருந்தா லும், அதுகுறித்து தொடர் கவனம் போதுமானதாக இல்லை எனக் கருதுகிறோம்.

இதன் விளைவாகத் தான் அதிகாரிகளின், காவல்துறை யின் அலட்சியமான செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஜனநாயக மாதர் சங்கத்தை பொறுத்தவரை 1973இல் தமிழகத்தில் துவங்கப் பட்டு பெண்கள் மீதான வன்முறை களுக்கு எதிராகப் போராடி ஏராள மான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு களை பெற்ற இயக்கம். இந்தியாவில் ஒரு கோடிக்கு மேற் பட்ட பெண்களையும் தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பி னர்களை கொண்டுள்ள அமைப்பு. மனித உரிமை மீறல், பெண்கள் உரிமை மீறல் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தொடர்ந்து தலை யிட கூடிய அமைப்பு. மாதர் சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவமானப்படுத்திய சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வசூல் என்ற பெய ரில் பெண்களை மிகவும் நெருக்கடிக் குள்ளாக்கும் நுண் நிதி நிறுவனங்க ளின் அத்துமீறும் செயல்களை உடன் தடுத்து நிறுத்திட மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்திட வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் குறித்த புகார்களை பெற்று உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் கட்டுப்பாட்டுக் குள் நுண்நிதி நிறுவனங்களின் செயல் பாடுகளை அரசு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

;