tamilnadu

img

முடிதிருத்தும் தொழிலாளர்கள் 5 லட்சம் பேரை பாதுகாத்திடுக: வாலிபர் சங்கம்

சென்னை:
தமிழ்நாட்டில் முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்து வருவதால் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-

தமிழகத்தில் முடி திருத்தம் செய்யும் கடைகள் இரண்டு லட்சத் திற்கும் மேல் உள்ளன. இந்தக் கடைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினந்தோறும் தங்கள் வேலை செய்யும் பணத்தை வைத்துத் தான் அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். வேறு  பணிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் மிகமிகக் குறைவு. இத்தகைய சூழ்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் கடைகள் திறக்கப்படாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியை முடிதிருத்தும் தொழிலாளர்களும் அவர்களது குடும் பத்தைச் சேர்ந்தவர்களும் சந்தித்து வருகிறார்கள்.தமிழக அரசு, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்திருந் தாலும்கூட மொத்தமுள்ள 5 லட்சம் தொழிலாளர்களில் 17 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நலவாரியத்தில் பதிந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் முடிதிருத்தும் தொழிலாளர் களுக்கு தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச நிவாரணத்தையும் பெரும்பகுதி தொழிலாளர்கள் பெறமுடியவில்லை.கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடிதிருத்தும் பணியை மேற்கொள்ள முடியாததால் கடை மற்றும் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் நெருக் கடியை சந்தித்து வருகின்றனர். குடும்பமும் வறுமையில் வாடி வருகிறது. எனவே தமிழக அரசாங்கம் முடிதிருத்தும் ஒவ்வொரு தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.அதே போன்று வீட்டு வாடகை மற்றும் கடை வாடகையிலிருந்து இவர்களுக்கு விலக்கு அளித்திட அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மே 17 க்குப் பிறகு அரசு சொல்லக்கூடிய தனிமனித இடைவெளியை பின்பற்றி, உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்தி முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.மேலும் பாதுகாப்புக் கருதி கடைகள் திறக்க அனுமதி மறுக்கப் பட்டால் அதற்கான நிவாரணத் தொகையையும் அரசாங்கம் உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

;