tamilnadu

img

பெண்களுக்குச் சொத்துரிமை : தி.க. வரவேற்பு

சென்னை:
பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு தந்தை பெரியாரின் சமூகநீதியின், திராவிடர் இயக்கத்தின் லட்சிய வெற்றியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்து வாரிசுரிமை, சொத்துரிமைபற்றி தந்தை பெரியார்   1925 இல் செங்கற் பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.‘‘பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமைகளும், வாரிசு பாத்தியதைகளும் கொடுக் கப்படவேண்டுமென்றும், பெண்களும், ஆண்களைப் போலவே, எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும், அவகாசமும் கொடுக்கப்பட வேண்டுமென்றும்,’’ அந்த தீர்மானத்தில் கூறியிருந்தார்.‘‘பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும் என்றும் அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேற்கண்டவையே தற்போது  அரசின் சட்ட திட்டங்களாக, நடைமுறைகளாக செயல்வடிவம் எடுத்துள்ளன என் பதற்குத் தந்தை பெரியாரும், அதனை ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்த தி.மு.க. தலைவர்  கலைஞர்  எடுத்த முன் னோடி முயற்சிகளையும், பெண்கள் மறக்காமல் நன்றி செலுத்தவேண்டும். இதற்கு முன்பு அம்பேத்கர் இந்து மத சட்டத்தில் திருத்தம் கொண்டு வரமுயன் றார். ஆனால் சிலர் அதை தடுத்து
விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;