tamilnadu

img

காவல் துணை கண்காணிப்பாளர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு... தமிழக அரசு

சென்னை:
தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மகேஷ்வரி- சென்னை வேப்பேரி உதவி கமிஷனராக பணியில் இருந்த இவர், பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவில் கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.ஜெரினா பேகம்- சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக(துணை போலீஸ் சூப்பிரண்டு) உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பழனி சிறப்பு காவல்படை துணை கமாண்டராக மாற்றப்பட்டு உள்ளார்.ராஜேஸ்வரி- மதுரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.யாக இருக்கும் இவர், பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

கனகேஸ்வரி- திண்டிவனம் டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.கலிவரதன்- திருப்பூர் மனித உரிமை மற்றும் சமூக நீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று கோவை புதூர் சிறப்பு காவல்படை துணை கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.வெற்றிச்செல்வன்- மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனராக இருக்கும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை துணை கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கும்மராஜா- குளித்தலை டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று சேலம் நகர பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.ராஜசேகர்- மாநில போலீஸ் கட்டுப் பாட்டு அறை டி.எஸ்.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று போலீஸ் அகடமி கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.கண்ணன்- அரியலூர் மனித உரிமை மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
கோவிந்தராஜூ- சென்னை தேனாம் பேட்டை உதவி கமிஷனராக இருக்கும் இவர், சென்னை தெற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.பாஸ்கரன்- கோவை கிழக்கு குற்றப் பிரிவு உதவி கமிஷனரான இவர், சேலம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஜெயசிங்- சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனராக இருக்கும் இவர், ராமநாதபுர மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.ராஜூ- சேலம் மாவட்டம் ஆத்தூர் டி.எஸ்.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.உதயகுமார்- சென்னை ஆவடி சிறப்பு காவல்படை உதவி கமாண்டராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல்படை துணை கமாண்டராக மாற்றப்பட்டார்.சுப்பாராஜூ- கன்னியாகுமரி மனித உரிமை மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று நெல்லை தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

;