tamilnadu

img

தனியார் மருத்துவமனை கட்டணம் நிர்ணயம்

சென்னை:
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய  மருத்துவக் கழகத்தின் தமிழக பிரிவு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்த விவரம் வருமாறு:-லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்களுக்கு சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு லேசாக இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.25,377 வீதம் 17 நாட்களுக்கு கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயித்துள்ளது.மேலும் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. 

;