tamilnadu

img

பணிக்காலத்தில் முன்னர் இருந்த நடைமுறை தொடர வேண்டும்.... முதல்வருக்கு அரசு ஊழியர் சங்கம் கடிதம்

சென்னை:
அரசு ஊழியர்கள் பணிக்காலத்தை மாற்றாமல் ஏற்கெனவே இருந்த நடைமுறையான சனிக்கிழமை விடுமுறை நாளாக தொடர்ந்திட உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் கடிதம் அனுப்பி யுள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100 சதவீதம் இயங்கும் என அறிவித்த அடிப்படையில், அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தற்பொழுது 100 சதவீதம் அரசு அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு சில பத்திரிகைகளில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்கும் என செய்தி வெளி வந்ததைத் தொடர்ந்து ஒரு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை இயக்குநர், சனிக்கிழமை அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். அதுவும் 31.12.2020 வரை என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஒருசில துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக சனிக்கிழமை வர வேண்டுமென கூறப்பட்டுள்ளதும், பத்திரிகை செய்தியை மட்டுமே வைத்துக் கொண்டு இவ்வாறு அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளதும். தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்படாமல் இருக்கும்போது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது. கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக, அரசு ஊழியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியும், இந்த நோய் தொற்றினால் இறக்க நேரிட்ட பிறகும்கூட, அரசு எடுக்கும் சீரி ய முயற்சிகளை செயல்படுத்தி மக்களை காக்கும் பணியில் தனது இன்னுயிரையும் துச்சமெனமதித்து களப்பணியில் முன் களப்பணி யாளர்களாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

எனவே தற்பொழுது 100 சதவீத அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு, அரசு ஊழியர்கள் பணிபுரிந்துகொண்டு இருப்பதோடு மட்டும் அல்லாமல் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கான சேவைகள் எந்த விதத்திலும் 
பாதிக்கப்படாமல் மக்கள் நலப் பணிகளைசெய்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை மாற்றிடாமல் ஏற்கெனவே இருந்த நடைமுறையான சனிக்கிழமை விடுமுறை நாளாக தொடர்ந்திடஉரிய ஆணையை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

;