tamilnadu

அஞ்சலக குறைதீர்ப்பு நாள்

சென்னை, மார்ச் 17 இம்மாதம் 30ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு  மண்டல அளவிலான பொதுமக்களின் அஞ்சலக குறைதீர்ப்பு நாள் சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வடக்கு அஞ்சலக வளாகத்தில் (முதல் மாடி) அமைந்துள்ள சென்னை நகர தென்மண்டல அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொலைபேசி எண் 28341668, 28342554 மற்றும் மின்னஞ்சல் முகவரி dochennaicitysouth.tn@indiapost.gov.in   வடபழனி, விருகம்பாக்கம், சாலிக்கிராமம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக்நகர், கே கே நகர். செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி தொழில்பேட்டை சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அலுவலகம், மடிப்பாக்கம். ஆதம்பாக்கம், நங்கநல்லூர், சோளிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆழ்வார் திருநகர், ஆர் ஏ புரம், கோட்டுடூர்புரம், வேளச்சேரி முதலான சென்னை நகர தென்மண்டல எல்லைக்குட்பட்ட அஞ்சலகங்களில் பொதுமக்கள் அஞ்சலக சேவைகள் குறித்த தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை (பணவிடை / பதிவுத்தபால்கள் / சேமிப்பு வங்கி / சேமிப்பு சான்றிதழ்கள் முதலியவை) மேற்கண்ட முகவரியில் இம்மாதம் 27ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வந்து சேருமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக சென்னை நகர தென்மண்டல அஞ்சல் அலுவலகங்களில் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.