tamilnadu

img

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரியை சிறைக்கு அழைத்துச் சென்றதால் காவல் வாகனத்தை பின்தொடர்ந்து அவரது மகன் சென்றுள்ளார். இருவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்த உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களின் கொடூர தாக்குதலால் அடுத்தடுத்து  உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பி இருக்கிறது. காவல்துறை மற்றும் அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கு பதிவு செய்க
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,‘‘காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சாத்தான்குளம் காவல்துறையின் காட்டுமிராண்டிச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும்” 
என்று தெரிவித்துள்ளார்

மனித நேயமற்ற செயல்
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்,” இந்த சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களின் இந்த மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

;