tamilnadu

img

“சமூகநீதி நாள்” முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை,செப்.17- பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. பெரியாரின் பிறந்தநாள் (செப்.17)  சமூகநீதி நாளாகக் கொண்டாடப்ப டும் என்று சட்டப்பேரவையில் முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு  நிகழ்வு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ‘சமூகநீதி நாள்’  உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில்  அரசின் செயலர்கள், அரசு அதிகாரி கள் அனைவரும் கலந்துகொண்ட னர்.

உறுதிமொழி

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற  பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திற னும் பகுத்தறிவு கூர்மைப் பார்வை யும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக என்னை நான் ஒப்ப டைத்துக்கொள்வேன் மானுடப் பற்றும் மனிதாபிமான மும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும், சமூக நீதியையே அடித் தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர  இந்நாளில் உறுதிமொழி ஏற்கிறேன்’ என்று முதல்வர் உள்பட அரசு அலுவ லர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 

;