டேக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் கிரிக்கெட் அணியினர் திண்டுக்கல் என்.பி.ஆர் வளாகத்தில் மரக்கன்று நட்டனர். பசுமையான சூழலை உருவாக்குவதற்காக மரங்களை நடுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின், டேக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.