tamilnadu

img

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும்

சென்னை:
விலைவாசி உயர்வுக் கும், பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலையை தொடர்ச்சியாக மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்திக் கொண் டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஊரடங்கு தொடங்கும் போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 77.96 ரூபாய்க்கும், 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 70.64 ரூபாய்க்கும் விற்கப்படுவது,வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென் னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயாகவும், டீசல் விலை 4.93 ரூபாயாகவும் அதிகரித் துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களில் அனைத்துப் பயன்களையும் அள்ளி எடுத்துக் கொண்ட மத்திய பாஜக அரசு - ‘விலை உயர்வை’ மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்? இந்த விலைவாசி உயர்வு, பேருந்துக் கட்டண உயர் வுக்கும் வழி வகுக்கும். பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

;