tamilnadu

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ஆணையரிடம் மனு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ஆணையரிடம் மனு

கடலூர், ஆக.14- கடலூர் மாநகராட்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத்துக் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளித்தனர். இதில், குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனைச் சரி செய்ய வேண்டியும், மக்களை மிகமிகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், பன்றிகளை அப்புறப்படுத்தவும், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு கைகால் எலும்பு முறிவு முதல் மரணம் வரை செல்லக்கூடிய நிலைமை ஏற்படுகிறது எனவும் இவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கோரிக்கை மனு ஆணையரிடம் அளிக்கப்பட்டது. குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் எம். மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், பொருளாளர் கே. வெங்கட்ரமணி, துணைத் தலைவர்கள் சண்முகம், செல்வகணபதி, கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.