நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, சென்னை ஜார்ஜ்கோட்டை அரிமா சங்கம் இணைந்து ‘புதிய இந்தியா’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பெரம்பூரில் தர்மமூர்த்தி, ராவ்பகதூர் உள்ளிட்ட 3 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் , கட்டிடங்களுக்கும் காப்பீடு வழங்கப்பட்டது. மண்டல அதிகாரி இந்திரா, விடிசன் மேலாளர் ஆர்.சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுஜாகிளமென்ட்,ஆர்.ராஜ்குமார், லைன் ஆர்.முரளி, சரளா, ஹேமலதா, வி.சரவணன், கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.