tamilnadu

img

அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் அகமதிப்பீடு தேர்வு மதிப்பெண் களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:“ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வருகைப்பதிவு உண்டு. ஊரடங்கு முன்பு நடந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகைபுரிந்து இருந்தால் அதற்கான வருகைப் பதிவுகள், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவு ஆகிய இரண்டையும் இணைத்து தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்ப வேண்டும். இதனை ஏஐசிடிஇ, யுஜிசி, தமிழ்நாடு உயர்கல்வித் துறை ஆகியவை அறிவித்துள்ளது.

மார்ச் 16ஆம் தேதிக்கு முந்தைய மாணவர்களின் வருகைப்பதிவு, தற்போது நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவு ஆகியவற்றை அந்தந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல, மார்ச் 17ஆம் தேதியில் இருந்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு இரண்டு அகமதிப்பீட்டு தேர்வுகள் நடத்தும் வாய்ப்பு இருந்தது.இதையடுத்து, அந்தந்த பொறியியல் கல்லூரிகளில் அகமதிப் பீட்டு தேர்வுகள் நடந்திருக்கும். அதனால், அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் மாணவர்களின் முழுமையான வருகைப் பதிவுகள், அகமதிப்பீட்டு மதிப்பெண் கள் ஆகியவற்றை அண்ணா பல் கலைக்கழகத்தின் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

மேலும், தற்போது நடக்க இருந்த பருவத் தேர்வுகளுக்காக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;