tamilnadu

img

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனைக்கு எதிர்ப்பு.... ஊழியர்கள் ஒருவார காலம் பிரச்சாரம்....

சென்னை:
பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வார கால பிரச்சார இயக்கத்தை திங்களன்று (மார்ச் 22) ஊழியர்கள் தொடங்கினர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டு திங்களன்று (மார்ச் 22) 20ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் சங்கக் கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் 11 சதவீதத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அளிக்கிறது. ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகியநிறுவனங்கள் 89 சதவீத சேவையை அளிக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் கேட்டு கடந்த 5 வருடத்தில் 3 முறை வேலைநிறுத்தம் செய்தோம். அதன்பிறகு 4ஜி உரிமத்தை மத்திய அரசு வழங்கியது. ஆனால் சேவை வழங்க தடைகளை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக டவர்களை மேம்படுத்தவும், நவீன கருவிகளை வெளிநாடுகளில் இருந்து வாங்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. 4ஜிசேவை வழங்கக்கூடிய உபகரணங்களை தயாரிக்கக்கூடிய அனுபவமிக்க நிறுவனம் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. இதன் காரணமாக 4ஜி சேவைவழங்க முடியாமல் உள்ளது. 9500கோடி ரூபாயில் டவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கமறுக்கிறது. இதனால் நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்க முடியவில்லை.

80 ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்விலும், 60 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டனர். தற்போது பணிச்சுமையோடு பணியாற்றும் நிரந்தர ஊழியர்களாக உள்ள60 ஆயிரம் பேருக்கு பிப்ரவரி மாதச்சம்பளத்தை கூட வழங்காமல் உள்ளனர். இவ்வாறாக பலமுனைகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்தியஅரசு சிதைக்கிறது.பொதுத்துறை நிறுவனங்களை விற்று ரூ.2.50 லட்சம் கோடி நிதி திரட்டஉள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதில் ரயில்வே, பிஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை மூலம்1.30 லட்சம் கோடி ரூபாயை ஈட்டஇலக்கு நிர்ணயித்துள்ளனர். குறிப்பாகபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 75 ஆயிரம் டவர்கள், 7.50லட்சம் கிலோ மீட்டர் உள்ள ஆப்டிக் பைபர் கேபிள்களை அடிமாட்டு விலைக்கு விற்று 40 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட உள்ளனர். இவ்வாறு அனைத்தையும் விற்றுவிட்டால் எவ்வாறு 4ஜி சேவை தர முடியும்?

பொதுத்துறைகள் மக்களின் சொத்து. அவற்றை பாதுகாக்க ஊழியர்கள் போராடுகிறோம். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் விரைந்து 4ஜிசேவையை வழங்க உள்ள தடைகளை நீக்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கக் கூடாது,அவற்றின் சொத்துக்களை விற்கக் கூடாது என வலியுறுத்தி ஒருவார காலபிரச்சார இயக்கத்தை பிப்.22 அன்று தொடங்கி உள்ளோம். இதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், சென்னைதொலைபேசி மாநிலச் செயலாளர் ஸ்ரீதர்சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;