tamilnadu

img

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை கைது செய்த சிபிஐ  

விசா முறைகேடு வழக்கில் எம்.பி, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள்  குற்றம் சாட்டி உள்ளனர். 250 சீனர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு மகன் கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  

இதனால் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, டெல்லியில் லோரி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கர்நாடகாவில் 3 இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.  

இந்த நிலையில், விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

;