tamilnadu

img

பணப் பலன்களை வழங்குக... அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்....

சென்னை:
ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வில் சென்ற, மரணமுற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சருக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா பேரிடர் காரணமாக தங்களை நேரில் சந்திக்க இயலவில்லை.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும் தமிழக மக்களுக்கு சிறப்பான சேவையாற்றவும் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழுமையான ஒத்துழைப்பை நல்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் கடந்த 5 ஆண்டு காலமாக அண்ணா தொழிற் சங்கம் தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டங்கள் நடத்தின என்பதை தாங்கள் அறிவீர்கள்.

போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பல போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சி காலத்தில் முழுமையான தீர்வு காணப்படவில்லை.இறுதியாக, கடந்த பிப்ரவரி 25, 26, 27 தேதிகளில் மூன்று நாட்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வேலைநிறுத்தம் விலக்கிக்கொள் ளப்பட்டது.தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என் பது முக்கியமான கோரிக்கையாகும்.வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில் அரசு ஆணை பிறப்பிக்கப் பட்டு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வுகால பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசாணை அடிப் படையில் ஓய்வு கால பலன்கள் வழங்கப்படவில்லை.

தற்போது, தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டு அதற்குரிய பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேற்படி பணப்பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் சொல்ல மறுத்து வருகின்றனர். அதிகாரிகளின் செயல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம்.எனவே, தாங்கள் தலையிட்டு உடனடியாக பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டுகிறோம்.மேலும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கு பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சில வழக்குகளை காரணம் காண்பித்து ஓய்வுகால பலன்கள் நிறுத்தப்பட்டது. இது தவறு என தொழிலாளர் துறை பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வேலை நிறுத் தத்தை ஒட்டி தொழிலாளர் துறை முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இப்பிரச்சினை விவாதிக்கப் பட்டது. கிரிமினல் வழக்குகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினை சம்பந்தமாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி பணப்பலன் நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணப்பலனை வழங்குவதாக அதிகாரிகளும் ஒப்புக் கொண்டு தொழிலாளர் துறையால் ஏற்புடைய அறிவுரையும் வழங் கப்பட்டது. ஒப்புக்கொண்ட தீர்வுகளை கூட இதுவரை அமல்படுத்தாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.எனவே, தாங்கள் இது சம்பந்தமாகவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

;