tamilnadu

img

கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் லாபவெறியால் பலியாகும் அப்பாவிகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புதுநகரில் குடியிருப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ககண்டெய்னர்  லாரிகள் அத்துமீறி நுழைவதால் சாலைவிபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன.தொடரும் சாலை விபத்துக்களால் பொதுமக்கள் மத்தியில் உயிர் பலிகுறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப் பள்ளித் துறைமுகத்திலிருந்து சரக்கு களை ஏற்றுமதி இறக்குமதி செய்வ தற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி விரைவு சாலைகள் வழி யாக செல்கின்றன வர்த்தநோக்கோடு செயல்படும் இந்த கனரக வாகன போக்குவரத்தால் நெரிசல்நேரங்களில் மக்கள் பயன்படுத்தும் பொதுபோக்கு வரத்து, ஆட்டோ, இருசக்கரவாக னம், கார் உள்ளிட்ட லகுரக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  இந்த லாரிகள் பணியில் இல்லாத நேரங்களில் மாதவரம், சாத்தாங்காடு பகுதிகளில் உள்ள மையங்களில் கட்ட ணம் செலுத்தி நிறுத்தப்படுகிறது. கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்த சில கன்டெயினர் லாரி உரிமையா ளர்கள் காவல்துறையினரின் உதவியோடு குடியிருப்பு பகுதிகளில் நிறுத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணலிபுதுநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தலைவர் கா.பாலமுருகன் கூறுகையில், சட்ட மும் போக்குவரத்து விதியும் மக்களை பாதுகாப்பதாக இருக்கவேண்டும். ஆனால் மணலிபுதுநகர் குடியிருப்பு பகுதியில் கனரக வாகனங்கள் அனு மதிக்ககூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி தனியார் முதலாளி கள் ஒரு சில காவல்துறை அதிகாரிக ளின் உதவியோடு அனுமதிக்கின்றனர். விபத்தை தடுப்பதற்காக பொதுமக்கள் தங்கள் சேமிப்பு தொகையில் கனரக வாகனங்களை மட்டும் தடுக்கும் நோக்கோடு போடப்பட்ட இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். ஆனால் இது சட்டவிரோதம் எனக் கூறி அந்த தடுப்புக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருப்பது வெட்கக்கேடு. சம்மந்தப்பட்ட குற்ற வாளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதைத்தவிர வேறு வழிஇல்லை என்றார்.

முதலாளிகளின் சுயலாபத்தால் பலியாகும் அப்பாவி மக்கள்
வழக்கறிஞர் கண்ணன் (சமூக ஆர்வலர்) கூறுகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தால் திட்ட மிட்டு அமைக்கப்பட்ட குடியிரு ப்புப்பகுதி இது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 22 ஆயிரம் பேர் வசித்துவரும் இங்கு போதிய அடிப்படைவசதிகள் இல்லை. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பின்னரும் இங்கு பல இடங்களில் பாதாளசாக்கடை வசதி கொடுக்கப்படவில்லை. மழைநீர் வடி கால்வாய் முற்றிலும் சீர்கெட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் முழுக்க முழுக்க குடியிருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட இங்கு வர்த்த ரீதியான கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படு வது சட்டவிரோதமாகும். சில தனியார் முதலாளிகள் தங்கள் சுயலாபத்திற் காக இங்குள்ள இடங்களை வாங்கி குவித்தும், காலியிடங்களை ஆக்கிர மித்தும் வருகின்றனர்.  கனரக வாகனங்களில் போக்கு வரத்தால் கடந்த சில மாதங்களில் மட்டும் 3 பேர் பரிதாபமாக உடல்சுங்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மணலிபுதுநகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் புகார் அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படுவ தில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதனால் அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிலநேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களோடு மோதல் போக்கு ஏற்படுகிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய காவல்துறையும் போக்குவரத்து காவலர்களும் மக்கள் நலனில் அக்கரை யோடு பணியாற்றினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.

பொதுமக்களுக்கு பெரும் தொல்லை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தீனன் கூறுகையில், மணலி மண்டலம் 2க்கு உட்பட்ட மணலி புதுநகரில் வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியிருப்புகள் உருவாக்கப் பட்டது. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பின்னர் எங்கள் பகுதியில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும் என்று நினைத்தோம் ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. அருகே உள்ள ஆலைகளால் காற்று மாசு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிலத்தடிநீர் கெட்டுக் கொண்டே வருகிறது. மழைக்காலங்க ளில் தெருக்கள் சேறும், சகதியும், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கி றது. இதற்கிடையில் கண்டெய்னர் லாரிகள் ஊருக்குள் நிறுத்துவதால் பொதுமக்களுக்கு பெரும்தொல்லை ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் குடிமகன்களால் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாது காப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இருச்சக்கர வாகன ஓட்டிகள் சாலை யோரம் நிறுத்தப்படும் கனர கவாகனங்கள் மத்தியில் சிலநேரங்க ளில் நுழைந்து ஓட்டும் போது எதிரே வரும் வாகனங்களில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்ட த்திற்கு தயாராகிவருகின்றனர். மக்க ளின் நலன்காக்கவும் பிரச்சனை தீர்க்க வும் மார்க்சிஸ்ட்கட்சி களத்தில் நின்று மக்களோடு போராடும் என்றார்.

விபத்தில் கணவரைபறிகொடுத்த புஷ்பம்
சாலைவிபத்தில் பலியான சிட்டி பாபு துணைவியார் மகிமை புஷ்பம் பேசுகையில், எனது கணவர் சிட்டிபாபு கடைக்கு சென்றபோது வேகமாக வந்த கண்டெய்னர் லாரியில் சிக்கி அந்தஇடத்திலேயே உயிரிழந்து விட்டார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். அவர் போனதற்கு பின்னர் வீட்டை அடகுவைத்துத்தான் குழந்தைகளை படிக்கவைத்து வருகிறேன். இதுவரை எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. கண்டெய்னர் லாரிகளை இனி ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது அதற்காக நடத்தப்படும் போராட்டத்தில் நான் குடும்பத்தோடு பங்கெடுத்துக்கொள்வேன் என்று உறுதியோடு கூறினார்.

விபத்துக்களால் உடல் ஊனம் அதிகரிப்பு 
கடந்த 40 ஆண்டுகளாக மணலி புதுநகரில் வசித்துவரும் ஜோஷி என்பவர் பேசுகையில், எங்களின் உயிருக்கு அரசும், நிர்வாகமும் பாது காப்பாக இருக்கும் என்று நம்பி வாழ்ந்து வருகிறோம். தற்போது எங்கள் நம்பிக்கை குறைந்து வருகிறது. சாலை விபத்துக்கள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. உயிர்பலி மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தினசரி சிறுசிறு சாலைவிபத்துக்களால் பலர் ஊனமாகி வருகின்றனர். சிறு வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்தை கட்டுப்படு த்த 40 அடி அளவிலான இரும்பு தடுப்பு அமைத்துக்கொண்டோம். ஆனால் அதனை உடனே அகற்றவேண்டும் என பல வகைகளில் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஒற்றுமையோடு இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள முடிவு எடுத்துவிட்டோம் என்றார். ம.மீ.ஜாபர்

;