tamilnadu

img

காலமானார்

சென்னை, மே 1-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உருப்பினருமான கே.இளங்கோவின் தாயார் ஆர்.மனோரஞ்சிதம் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.
பின்னர் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சேவாரம் என்ற ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது உடலுக்கு உறவினர்கள் மட்டும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, செந்தில்நாதன், திருமூர்த்தி உள்ளிட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், அனைத்து மாநில நிர்வாகிகளும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினர். பின்னர் அவரது உடல் அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இளங்கோ அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராக 2 முறை இருந்தார் என்பதும், தற்போது இணை செயலாளராக உள்ளார்.