tamilnadu

img

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு கிராம சுகாதார செவிலியர் போராட்டம் அறிவிப்பு

சென்னை:
பணி பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஜூலை 21, 22 தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியாற்றுவதென்று கிராம சுகாதார செவிலியர்கள் முடிவெடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி, பொதுச்செயலாளர்  பா. ராணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பேரிடர் காலத் தில் உயிரை பணயம் வைத்து, வழக்கமான தாய்சேய் நலப் பணிகளுடன், தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக் களை கணக்கெடுத்து, அவர்களுக்கு பரிந்துரை செய்து வரும் செவிலியர்களுக்கு தேவையான அளவு பாதுகாப்பு உபகரணங் கள் வழங்கவில்லை. இதனால் திருப்பூர், நாமக் கல், ராணிப்பேட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணிக்கு சென்ற செவிலியர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே சுயமாக சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு உரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல், தனியார் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரு செவிலியரின் உடல் நிலை மோசமானதையடுத்து திண் டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜூலை 17 அன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப் பட்டுள்ளார்.எனவே, கிராம சுகாதார செவிலியர்களுக்கு தேவையான அளவுஎன்95 முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும், தொற்று பாதிக் கப்பட்ட செவிலியர்கள் உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 21, 22 தேதிகளில் தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;