tamilnadu

குறைந்த கூலி வேலைக்குத்தான் வடமாநிலத்தவர் வருகிறார்கள்

தமிழர்கள் புறக்கணித்த, குறைந்த கூலி  வேலைக்குத்தான் வடமாநில தொழிலா ளர்கள் வருகின்றனர் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்  தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில்  குறைந்தபட்ச கூலிச் சட்டம் அமலாக வில்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பேரவையில் புதனன்று (ஜூலை 10) தொழிலாளர் நலத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியத்தின் மீது நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
தா.மோ.அன்பரசன் (திமுக): கண்காணிப்புக் குழுக்கள் செயல்படாததால் நலவாரிய பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஆட்டோ, கட்டுமான நலவாரியங்களில் பணம் உள்ளது. இதர நலவாரியங்களில் பணம் இல்லாததால் கேட்பு மனுக்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே பணப்பயன் வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர் நிலோபர் கபில்: 2019-20ல் பணப்பயன் வழங்க 149 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீம்’ கூடாது
தா.மோ.அன்பரசன்: நீட் தேர்வு போன்று  தொழிலாளர் துறையில் ‘நீம்’ திட்டத்தை  மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக 17 கார்ப்பரேட் நிறுவனங்கள்  ‘நீம்’ ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ள னர். தமிழகத்தில் டிவிஎஸ், அபர்ஜித் நிறுவ னங்கள் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். இந்த ஏஜெண்டுகள் தொழிலாளர்களை ஒரு நிறுவனத்தில் தொழில் பழகுநராக சேர்ப்பார்கள். அந்த தொழிலாளி 3 ஆண்டு கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு எந்த சட்டச் சலுகை யும் கிடையாது. விபத்து நிகழ்ந்தால், இறந்தால் ஏஜெண்டாக உள்ள நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும். 3 ஆண்டுக்கு பிறகு அவரை வெளியேற்றி விடுவார்கள். அந்த தொழிலாளர்களின் எதிர்காலம் என்னாவது? இதன்மூலம் ஒப்பந்த தொழி லாளர் முறை நிரந்தரப்படுத்தப்படும். நிரந்தர  தொழிலாளர்களே இல்லாத நிலையை உரு வாக்கும் இந்த திட்டத்தை ஏற்கக் கூடாது.

அமைச்சர் கே.பாண்டியராஜன்: தமிழ கத்தில் ‘நீம்’ திட்டத்தில் 50ஆயிரம் பேர் பணி யாற்றுகின்றனர். பயிற்சி பெற்ற திறமை யான தொழிலாளர்களை உருவாக்க இந்த  திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட் டத்தினால் சிறுகுறு நிறுவனங்களில் 6 ஆயி ரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இத னால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 3 வரு டம் பயிற்சி பெற்றால் அதை வைத்து பெரு நிறுவனங்களில் வேலை பெறலாம்.
தா.மோ.அன்பரசன்: தமிழகத்தில் ஏராள மான வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ள னர். இதனால் தமிழக மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. பன்னாட்டு நிறுவ னங்கள் 80 விழுக்காடு பணிகளை தமிழக மக்களுக்கும், அதில் 20 விழுக்காடு சுற்று வட்டார மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும்.
தொழில்துறை அமைச்சர்: தமிழர்கள் புறக்கணித்த வேலைகளை, குறைந்த கூலிக்கு செய்யத்தான் வெளிமாநிலத் தொழி லாளர்கள் வருகிறார்கள். அந்த தொழி லாளர்களுக்கு குறைவான கூலியே தரப்படுகிறது.
தா.மோ.அன்பரசன்: 480 நாட்கள் பணி முடித்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளர் நலத்துறையில் 700  பேர் 8 ஆண்டுகளாக பணியாற்றிய பிறகும்  நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். துணை  ஆணையர்களிடத்தில் 5 ஆயிரம் வழக்குகள்  தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை தீர்வு செய்ய  வேண்டும். அதிமுக ஆட்சியில் தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன.

கைது செய்து கைவிலங்கிட்டு சிறையில் தள்ளியது யார்?
மின்துறை அமைச்சர் பி.தங்கமணி:   2006-11 காலத்தில் ஹூண்டாய் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சிஐ டியு தொழிற்சங்கத் தலைவர் அ.சவுந்தர ராசன் போராடியபோது, அவரை கைது  செய்து விலங்கிட்டு சிறையில் அடைத்தீர்  களா இல்லையா? அதிமுக ஆட்சியில்  கொண்டு வந்த நோக்கியா ஆலையை, இரு முறை வரி கொண்டு வந்து வெளியேற்றியது காங்.-திமுக கூட்டணிதான்.

கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்
அலெக்சாண்டர் (அதிமுக):  அரசு கேபிள்  டிவி-யில் சன் குழும சேனல்கள் இலவச மாக கொடுக்கப்படுகிறது. இதற்காக அரசி டம் இருந்து சன்குழுமம் மாதம் 5.75 கோடி  வசூலிக்கிறது. சன் குழுமம் தனது சேனல்  களை இலவசமாக கொடுத்தால், கேபிள் டிவி கட்டணம் மேலும் குறையும். முதல மைச்சர் அறிவித்தபடி கேபிள் டிவி கட்டணம்  குறைக்கப்படும்.
ஐ.எஸ்.இன்பதுரை: எனது தொகுதியில் உள்ள கிராமங்களை டிஜிட்டல் கிராமங்க ளாக மாற்ற வேண்டும். தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் எம்.மணிகண்டன்: 12 ஆயிரத்து 564  ஊராட்சிகளில் கண்ணாடி இழை (பைபர் நெட்) புதைக்கப்பட்டு இணைய சேவை வழங்  கப்படும். இவ்வாறு அந்த விவாதம் நடை பெற்றது.