tamilnadu

img

ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை: மாணவன் தற்கொலை

கடலூர், ஜூலை 31- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை  சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விக்னேஷ் (14). இவன் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  10ஆம் வகுப்பு படித்து வந்தான். பொதுமுடக்கத்தால்  பள்ளிகள் மூடப்  பட்டுள்ளதால், அந்த பள்ளியில் ஆன்லைன் மூலம்  பாடம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே  ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு விக்னேஷ் தந்தையிடம் கேட்டார்.  அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம்  இல்லை என்றும் முந்திரி கொட்டைகளை விற்று  செல்போன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.  இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தனது  தாயாரின் சேலையால்  தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார். இதுகுறித்து காடம்புலியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்து வதாக கூறி வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாண வர்களிடம் செல்போன் வசதியோ கணினி வசதியோ, பிராட்பேண்ட் இணைப்பு இல்லாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பள்ளி களிலிருந்து நெருக்கடி கொடுப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;