tamilnadu

செய்தித் துளிகள்

புதுச்சேரி தொற்று 14,127

புதுச்சேரியில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,127ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 221ஆக உயர்ந்துள்ளது.

கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கான கௌரவ உதவி நிதி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முறையீடு மற்றும் போராட்டங்களின் விளைவாக ஞாயிறன்று உளுந்தூர்பேட்டை ஒன்றியம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்ற இடைத்தரகரை சென்னையிலிருந்து வந்த சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வங்கிக் கணக்கு

10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் கூறியுள்ளார்.

காவலர்கள் மீது தாக்குதல்

வேலூர் அல்லேரிமலையில் சோதனைக்கு சென்ற காவல் துறையினரை வழிமறித்து சாராய கும்பல் தாக்குதல் நடத்தியதில் தலைமைக் காவலர் அன்பழகன் (35), காவலர் ராகேஷ் (29) ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 120 காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு

ஊரடங்கு விதிமுறையை கடைபிடிக்காமல், 144 தடை உத்தரவை மீறியதாக திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி, லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.