tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கம்  

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்திலிருந்து திருக்குறள் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஒவ்வொரு நிலை பதவிகளுக்கும் அரசு தனித்தனியாக குரூப் வாரியாக தேர்வுகளை நடத்துகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 4, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டது. இதில் குரூப் 2, மற்றும் குரூப் 2ஏ போன்ற அதிகாரி நிலை பதவிகள் தேர்வின் பாடப்பகுதியில் இருந்து திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினசரி வாழ்வில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூக பொருளதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறளின் தத்துவம் என 6 தலைப்புகளில் திருக்குறள் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.  2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.      

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. 2019-க்கு முன்பு இருந்த பாடத்திட்டம் மீண்டும் இடம்பெற்றிருப்பதாக துறைசார்ந்த பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வர்கள் மற்றும் தமிழார்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

;