tamilnadu

பொன்னேரியில் புதிய தொழிற்பேட்டை

சென்னை,ஏப். 27-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேசியநெடுஞ்சாலையில் மகேந்திரவோர்ல்டு சிட்டி சார்பில் ஆரிஜின்ஸ் என்ற பெயரில் தொழில்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் எச். இ. கெஞ்ஜி கிரமட்சு இதனை துவக்கி வைத்தார். இதன் துவக்க விழாவில் தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரிகள், மஹிந்த்ரா லைஃப்ஸ்பேஸ் மற்றும் ஜப்பானை சேர்ந்த சுமிடோமோ கார்ப்ரேஷன் ஆகிய நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த தொழிற்பேட்டை மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி டெவெலப்பர்ஸ் லிமிடெட் மற்றும் சுமிடோமோ கார்ப்ரேஷன் ஆகிய நிறுவன்ங்களிடையே 60:40 என்ற விகிதத்தில் கூட்டுமுயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது.இரு நிறுவனங்களும் இணைந்து ஏறக்குறைய 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சென்னை ஆரிஜின்ஸ் முழுமையான செயல் பாட்டில் வரும்போது, 7000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆரிஜின்ஸின் முதற்கட்டம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மஹிந்த்ரா லைஃப்ஸ்பேஸ் நிர்வாக இயக்குநர் சங்கீதா பிரசாத் கூறினார்.

;