tamilnadu

img

3, 4, 5 ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகங்கள் விற்பனை -பாடநூல் கழகம்

தமிழக பாடத்திட்டத்தில் உள்ள 3,4,5 வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.