tamilnadu

img

நாசா செல்லும் மாணவிக்கு முதல்வர்  ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை,பிப்.23- நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில் நாமக்கல்லை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி அபிநயா தேர்ச்சி பெற்றதை சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது. மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார் என்றும், அவருக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், அபிநயாவின் சாதனையை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாகவும் மாணவிக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.