மயிலாப்பூர் தொகுதி, ராஜா அண்ணாமலைபுரம், வள்ளீஸ்வரன் தோட்டம், டி பிளாக், எண் 24 வீட்டின் உரிமையாளர் கணேசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஞாயிறன்று (செப்.15) அதிகாலை மேல்தள காரைகள் பெயர்ந்து அவர் மீது விழுந்தது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளர். இந்த குடியிருப்பு பகுதியில் அடிக்கடி தளங்கள், படிகட்டுகள், சன்ஷேடுகள் போன்றவை இடிந்து விழுந்து விபத்து நிகழ்கிறது. எனவே, தமிழக அரசு அறிவித்தபடி அங்குள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை விரைவாக கட்டித்தர வேண்டுமென்று அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.