சென்னை
“தமாகாவின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சில கட்சிகள் தமாகாவை பாஜகவில் இணைக்கப் போவதாகவும், நான் பாஜக மாநிலத் தலைவராகப் போவதாகவும் வதந்தி பரப்பி வருகிறார்கள். இது வடிகட்டிய பொய். நான் ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன். இதுபோன்ற வதந்திகள் மூலம் தமாகாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது’’ என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.