tamilnadu

img

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தலைக்கவசம் அணியாமல் மற்றும் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லாமலோ, ஓட்டுநர் உரிமம் இல்லாமலோ வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, 2ஆவது முறை சிக்கினால் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.

கார்கள், ஜீப்புகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிவேகமாக ஓட்டினால் ரூ.2000 அபராதமும், கனரக வாகனங்களை வேகமாக ஓட்டினால் ரூ.4000 அபராதம் விதிக்கப்படும். 

;