சென்னை, மார்ச் 24- சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செவ்வா யன்று (மார்ச் 24) நடைபெற்ற மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய வேடசந்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பரமசிவம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி னார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பி னர்கள் பதவியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்திற்கு தற்போது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார். மேலும், “சட்டமன்ற, மேலவை முன்னாள் உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூ தியம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுதா ரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 12 ஆயி ரத்து 500 ரூபாயாக உயர்த்தப் படும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படும்” என்றும் கூறினார். “சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, மேலவை முன்னாள் உறுப்பினர்கள் இனி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உதவியாளர்கள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் மட்டும் பயணம் செய்ய அனு மதிக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு ஏப் ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
எம்எல்ஏ-க்களுக்கு வீடு
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளிக்கை யில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், விதிமுறை களுக்குட்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை யில் சொந்த குடியிருப்பு கட்டித் தருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்” என்றார்.