tamilnadu

img

அண்ணா பல்கலை: ’மைனர் டிகிரி’ திட்டம் அறிமுகம்

வேலைவாய்ப்புக்கு கூடுதல் தகுதியை சேர்க்கும் வகையில், பொறியியல் மாணவர்கள் இரண்டு பட்டங்களை பெறும் ’மைனர் டிகிரி’ திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பாடத்திட்டங்கள் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொறியியல் பாடத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு   தமிழர் மரபு மற்றும் தமிழரின் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டரில்   சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்புக்கு கூடுதல் தகுதியை சேர்க்கும் வகையில், பொறியியல் மாணவர்கள் இரண்டு பட்டங்களை பெறும் ’மைனர் டிகிரி’ திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின்படி, ஃபின்டெக் மற்றும் ப்ளாக் செயின் (Fintech and block chain), பொது நிர்வாகம் (Public administration), தொழில்முனைவு (entrepreneurship), பிசினஸ் டேட்டா அனலிஸ்ட் (Buisness data analyst), சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environment sustainablity) ஆகிய 5 பாடங்களையும் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இரண்டாவது டிகிரி வழங்கப்படும். இந்த பாடங்களை மூன்றாவது ஆண்டு முதல் படிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 

;