tamilnadu

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, மே 21-காவிரி தண்ணீரை பெற்று மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளா மல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக் கிறது. கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத் திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அதிமுக அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலைக் காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலையைதரும் செய்தியாகும்.காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக காலதாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.அப்படி முடியவில்லை என்றால், அதிமுக அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

;