tamilnadu

img

சென்னையில் கடைகள் திறந்திருக்கும் நேர குறைப்புக்கு வணிகர்கள் ஆதரவு

சென்னை:
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்  ஜூன் 30 ஆம் தேதி வரை பிற்பகல் 2 மணி வரைமட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக த. வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னையில் கொரோனா பரவுவதை கவனத்தில் கொண்டு, நாட்டின் நலன், மக்கள் நலன் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, பரவலைத் தடுக்கும் வகையில் ஜூன் 16 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்து, மதியம் 2 மணிக்கு கடைகளை அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.வணிகர்களும், பொதுமக்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என வணிகர்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறியுள்ளார்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அமைச்சரவை எடுத்துள்ள ஆய்வு கூட்ட முடிவில் வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்திய பொது முடக்கத்துக்கு ஆதரவாக, ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு பொது முடக் கத்துக்கு உத்தரவிட்டிருப்பதை முழு மனதோடு வரவேற்று, அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதற்கு பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதற்கு அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் அரசின் வழிகாட்டுதல்கள், சட்ட விதிகளுக்கு உள்பட்டு அறிவித்துள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.

;